தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இரண்டாவது காலாண்டு; எஸ்பிஐ லாபம் 55 சதவீதம் உயர்வு!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, இரண்டாவது காலாண்டு முடிவில், லாபம் 55 சதவீதம் உயர்வு கண்டு ரூ.5,246 கோடியாக உள்ளது.

By

Published : Nov 4, 2020, 7:54 PM IST

SBI Q2 profit State Bank of India Q2 results இரண்டாவது காலாண்டு எஸ்பிஐ லாபம் 55 சதவீதம் உயர்வு எஸ்பிஐ
SBI Q2 profit State Bank of India Q2 results இரண்டாவது காலாண்டு எஸ்பிஐ லாபம் 55 சதவீதம் உயர்வு எஸ்பிஐ

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ யின், செப்டம்பர் 30 வரையிலான இரண்டாம் காலாண்டு லாபம் 55 சதவீதம் உயர்ந்து ரூ.5,245.55 கோடியாக உள்ளது. அதே சமயம் வங்கியின் வாராக்கடனும் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் லாபம் ரூ.3,375.40 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வருவாயை பொறுத்தமட்டில் ரூ.95 ஆயிரத்து 373.50 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.89,347.91 கோடியாக காணப்பட்டது. வங்கியின் செயல்படாத சொத்துகளை பொறுத்தமட்டில் 5.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முன்னர் 7.19 சதவீதம் ஆக காணப்பட்டது. அந்த வகையில் வங்கியின் செயல்படாத சொத்துகள் 1.59 சதவீதம் குறைந்துள்ளன.

நிகர லாபத்தை பொறுத்தமட்டில் ரூ.3,011.73 கோடியிலிருந்து 52 சதவீதம் உயர்ந்து ரூ.4,574.16 கோடியாக உள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மொத்த வருமானமும் ரூ.72,850.78 கோடியிலிருந்து ரூ.75,341.80 கோடியாக உள்ளது. கரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் எஸ்பிஐ யின் லாபம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 40.56 கோடி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்திய ஜியோ; லாபம் மும்மடங்கு உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details