கரோனா பரவல் காரணமாக பல்வேறு துறைகளிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் கடனை திருப்ப செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக வங்கிகளும் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழலில் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையைக் கருத்தில்கொண்டு, நாட்டிலுள்ள ஐந்து முக்கிய வங்கிகள் தங்கள் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளன.
அதன்படி எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி ஆகியவை மூன்று அல்லது நான்காம் நிதியாண்டில், குறிப்பிட்ட அளவு தங்கள் பங்குகளை முதலீட்டாளர்களிடம் விற்க முடிவு செய்துள்ளன. அக்டோபர் இறுதி வாரத்தில் வராக்கடன் குறித்த தெளிவான நிலை வங்கிகளுக்கு தெரியவரும் என்பதால், அதன் பின் பங்குகள் விற்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.