மும்பை: வீட்டுக் கடன்களுக்கு 25 பிபிஎஸ் வரை வட்டி விகித சலுகையை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ.,யில் ரூ.70 லட்சத்திற்கு மேல் வீட்டுக் கடன்களுக்கு 20 பிபிஎஸ் வரை கடன் மதிப்பெண் அடிப்படையிலான சலுகைகள் வழங்கப்படும். ஸ்டேட் வங்கியின் செயலியான யோனோ மூலம் விண்ணப்பம் செய்தால், வட்டியில் கூடுதலாக 5 புள்ளிகள் சலுகை தரப்படும் என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
தங்கக் கடனைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்கள் வரை 7.5 விழுக்காடு வட்டி விகிதத்தில் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வகையில்சலுகைகள் வழங்கப்படும்.