தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமனம்! - சங்கீதா ரெட்டி

டெல்லி: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Sangita Reddy takes over as FICCI President
Sangita Reddy takes over as FICCI President

By

Published : Dec 23, 2019, 8:06 PM IST

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது 2019-20 இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சங்கீதா ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட எச்.எஸ்.ஐ.எல். (HSIL) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தீப் சோமானி தோல்வியுற்றார்.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவரும் ஸ்டார் & டிஸ்னி இந்திய தலைவருமான உதய் சங்கர், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் (FICCI) மூத்தத் துணைத் தலைவராகவும் எச்.யூ.எல். (HUL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சங்கீதா ரெட்டி கூறும்போது, “இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் வெற்றிகரமான ஆண்டை நான் எதிர்பார்க்கிறேன். நாட்டிற்காக பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்துவருகிறோம். இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்துவது குறித்தும் ஆலோசித்தோம். அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்காற்றுவோம்” என்றார்.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - சுஷில் குமார் மோடி

ABOUT THE AUTHOR

...view details