கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்குப் பெருநிறுவனங்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த தொகையை நிதியுதவியாக அளித்துவருகின்றனர். இந்நிலையில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் 20 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவியாக அளித்துள்ளது.
அதன்படி மத்திய அரசுக்கு 15 கோடி ரூபாயும் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ஐந்து கோடியும் வழங்கியுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த சில வாரங்களாக, கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் சாம்சங் நிறுவனமும் பங்கேற்றுள்ளது. நொய்டா பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 20க்கு பின் எவ்வாறு இயங்க வேண்டும்? உள்துறை அமைச்சகம் அறிக்கை