இணைய வர்த்தகமாக நிறுனமான ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் சச்சின் பன்சால்(Sachin Bansal), சைதன்யா ரூரல் இன்டெர்மேடிட்டின் டெவெலப்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்(Chaitanya Rural Intermediation Development Services Private Limited) நிதி சேவை நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்பார் என செய்தி வெளியானது.
பெங்களூருவைத் தலைநகராகக் கொண்டு செயல்படும் சைதன்யா ரூரல் நிதி சேவை நிறுவனம் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராமங்களில் வீட்டுக்கடன், இருசக்கர வாகனக் கடன் போன்ற நிதி சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சுமார் 1000 கோடி ரூபாய் பங்குகளுடன் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து விலகிய சச்சின் பன்சால்; ரூபாய் 780 கோடியை, சைதன்யா ரூரல் சர்வீசஸ் நிதி சேவை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சைதன்யா நிறுவனத்தில் அதிகம் முதலீடு செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில்தான், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை சைதன்யா நிறுவனத்துக்குக் கொண்டு வந்தார் என சச்சின் பன்சால் தெரிவித்துள்ளார்.