2019ஆம் நிதியாண்டில் இருக்கும் ஒட்டுமொத்த வாராக்கடன் ரூபாய் 8 லட்சத்து 79 ஆயிரம் கோடியில் சுமார் 12.4 விழுக்காடு, அதாவது 1.1 லட்சம் கோடி வாராக்கடன் விவசாயக் கடன்களால் ஆனது என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2016ஆம் நிதியாண்டில் இருந்த ஒட்டுமொத்த வாராக்டன் 5,66,620 கோடியில் வெறும் 8.6 விழுக்காடாக (ரூபாய் 48,800 கோடி) இருந்தது.
இவை அனைத்தும் அரசு அவ்வப்போது அறிவித்த கடன் தள்ளுபடிகளை உள்ளடக்கியது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய்யை தள்ளுபடி செய்தது. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு செய்த 50 ஆயிரம் கோடி ரூபாய்யை சேர்த்தால், இது 4.7 லட்சம் கோடியாக உயரும். இவை பெருந்தொழில் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள வாராக்கடன்களில் 82 விழுக்காடு ஆகும்.
மாநில வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்
மாநிலம் | நிதியாண்டு | தள்ளுபடி செய்யப்பட்ட கடன் |
ஆந்திரா | 2015 | 24 ஆயிரம் கோடி |
தெலங்கானா | 2015 | 17 ஆயிரம் கோடி |
தமிழ்நாடு | 2017 | 5,280 கோடி |
மகாராஷ்டிரா | 2018 | 34,020 கோடி |
உத்தரப் பிரதேசம் | 2018 | 36,360 கோடி |
பஞ்சாப் | 2018 | 10 ஆயிரம் கோடி |
கர்நாடகா | 2018 | 18 ஆயிரம் கோடி |
கர்நாடகா | 2019 | 44 ஆயிரம் கோடி |
ராஜஸ்தான் | 2019 | 18 ஆயிரம் கோடி |
மத்திய பிரதேசம் | 2019 | 36 ஆயிரத்து 500 கோடி |
சத்தீஸ்கர் | 2019 | 6 ஆயிரத்து 100 கோடி |
மகாராஷ்டிரா | 2019 | 45 முதல் 51 ஆயிரம் கோடி |