தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு!

டெல்லி: 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட சற்று கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Budget 2020
Budget 2020

By

Published : Feb 1, 2020, 7:06 PM IST

Updated : Feb 2, 2020, 7:10 AM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இதில் அரசு பங்குகளை விற்பது, வரியில்லா வருமானங்களை அதிகரிப்பது, மானியங்களைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு அறிவிப்புகள் இருந்தன.

அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட (ரூ. 3.18 லட்சம் கோடி) ஆறு விழுக்காடு கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை வாங்க ரூ. 1.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோல் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு ரூ. 2.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 1.5 விழுக்காடு அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு இந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதனால் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தைச் சேர்த்து, பாதுகாப்புத் துறைக்கான மொத்த பட்ஜெட் ரூ. 4.7 லட்சம் கோடியாக உள்ளது.

இதையும் படிங்க: '10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

Last Updated : Feb 2, 2020, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details