தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புதிதாக வீடுகட்ட கடன் வாங்கினால் உடனடி பலன்! - வீட்டு லோன் வட்டி குறைப்பு

மும்பை: புதிதாக வீடு கட்ட கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ வட்டி விகிதம் உடனடி பலனை கொடுக்கவுள்ளது.

SBI HOME LOAN

By

Published : Oct 7, 2019, 10:09 AM IST

வட்டி குறைப்பு

பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் வரை அண்மையில் குறைத்தது. இது வீடு, வாகன கடன் வாங்குவோருக்கு லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வீடுகட்ட புதிதாக கடன் வாங்கியவர்களுக்கு இந்தத் திட்டம் உடனடியாகப் பலனை கொடுக்கவுள்ளது. அதாவது வீடுகட்ட வாங்கிய கடனிலிருந்து, கால் சதவிகிதம் குறையவிருக்கிறது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக துணை இயக்குநர் பிரசாந்த் குமார் கூறும்போது, "இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

உடனடி அமல்

மேலும் இடம்பெயர்ந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனினும் சில சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான கட்டணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, புதிதாக வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்றார்.

இதையும் படிக்கலாமே

ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை பலனளிக்குமா? - நிபுணர்கள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details