இந்தியா முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அதிகப்படியான ஆஃபர்கள் சக நிறுவனங்களை ஆட்டம் காணவைத்தது.
அதிகப்படியான ஆஃபர் காரணமாக மற்ற நெட்வொர்க் சிம்களை பயன்படுத்தி வந்த பெரும்பாலனோர் ஜியோ சிம்மின் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
எனினும் ஏர்டெல், வோடபோஃன் போன்ற நிறுவனங்கள்; ஜியோ எண்ணிலிருந்து தங்கள் நெட்வொர்க் சிம்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புக்கு ஏற்ப கட்டணத்தை பெற்று வந்தது.அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ நிறுவனம் 13,500 கோடி ரூபாயை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்ற நெட்வொர்கிலிருந்து ஜியோ எண்ணுக்கு செல்லும் அழைப்பின் ரிங் ஆகும் நேரத்தை குறைத்துள்ளதாக ஜியோ நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் ஜியோ மீது புகார் ஒன்றை TRAI-யிடம் அளித்தனர்.
இதன் பின்னர் TRAI-இன் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஜியோ நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஜியோ எண்ணிலிருந்து மற்ற நிறுவனங்களுக்கு செல்லும் அவுட்கோயிங் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ஆறு பைசா வீதம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஜியோ வெளியிட்ட அறிக்கையில், ஜியோ எண்ணிலிருந்து ஜியோ எண்ணிற்கு செல்லும் அவுட்கோயிங் அழைப்புக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது என்றும், மற்ற நெட்வொர்க்களுக்கு செல்லும் அவுட்கோயிங் அழைப்புக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க:ஆறு நாட்களில் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய அமேசான், ஃப்ளிப்கார்ட்!