கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது. சீனாவில் வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் இத்தாலி, அமெரிக்க, ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
அதேபோல இந்தியாவிலும் இதுவரை 1,071 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 942 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.