மும்பை: தங்களது இணைய வர்த்தக தள பயனர்களுக்காக ஜூலை 26, 27 ஆகிய தினங்களில் அதிரடி சலுகைகளை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.
இது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற இணையதளத்தில் இச்சலுகை நேரலையில் வழங்கப்படும். தொலைக்காட்சிகள், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் என பல்வேறு பிரிவுகளில் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன.
ஸ்மார்ட்போன் பிரிவில், தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான கேஷ் பேக் ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். லேப்டாப்களை ரூ.16,999 முதல், 32 அங்குல ஸ்மார்ட் டிவிகள் ரூ.12,990 முதல் சலுகை விலையில் கிடைக்கின்றன.