இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பாரத அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, குடும்பத்தில் சம்பளதாரர்கள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
இந்த மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு தனது நிறுவனத்தின் ஊழியர்களின் குடும்ப நலன் காக்க ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.