ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் நான்கு இயக்குநர்களின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி, ரைனா கரணி, சாயா விரணி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சார் ஆகிய நான்கு இயக்குநர்களுடன் இந்த மாத தொடக்கத்தில் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் அந்நிறுவனத்தின் கடனீந்தோர் கூட்டம் கடந்த 20ஆம் தேதி கூடியிருந்தது. அப்போது அனில் அம்பானி மற்றும் இயக்குநர்கள் ராஜினாமா செய்திருந்தனர். இந்த ராஜினாமா தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடனீந்தோர்கள் தரப்பில், அவர்களின் (அனில் அம்பானி உள்பட) ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதுபற்றி முறையாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் சட்டரீதியான நிலுவைத் தொகை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர், பொறுப்புகளை வழங்குவதன் காரணமாக, செப்டம்பர் 2019 காலாண்டில், 30,142 கோடி ரூபாய் இழப்பை பதிவு செய்திருந்தது. வோடஃபோன் ஐடியா லிமிடெட் ரூ.50,921 கோடி இழப்புகளைச் சந்தித்துள்ளது.