ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் நாளை (அக். 07) தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இதில் ரெப்போ வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
கோவிட்-19 பாதிப்பு காரணமாக நாட்டில் நிலவும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அதைச் சீர்செய்யும் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவிற்குப் புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேத்தன் கதே, பமி துவா, ரவீந்திர தோலாக்கியா ஆகிய மூவரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களாக அஷிமா கோயல், ஜெயந்த் வர்மா, சஷங்கா பிதே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கூட்டு வட்டி செலுத்தியோருக்கு பணம் திரும்ப தரப்படும்