தமிழ்நாடு

tamil nadu

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க ஆர்பிஐ ஆலோசனை!

By

Published : Mar 25, 2021, 12:26 PM IST

Updated : Mar 25, 2021, 12:39 PM IST

We are under discussion with govt on privatisation of PSBs process will go forward: RBI Guv. சக்தி காந்த தாஸ் பொதுத்துறை வங்கி தனியார்மயம் ஆர்பிஐ
We are under discussion with govt on privatisation of PSBs process will go forward: RBI Guv. சக்தி காந்த தாஸ் பொதுத்துறை வங்கி தனியார்மயம் ஆர்பிஐ

12:24 March 25

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆர்பிஐ ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசுடன் ஆலோசனை நடந்துவருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட் தாக்கலின்போது இரண்டுக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்றுவருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம்” என்றார்.

அண்மையில் ஐடிபிஐ வங்கி பங்குகள் பெருமளவு தனியாருக்கு விற்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : 'ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா?' - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சிறப்பு பேட்டி!

Last Updated : Mar 25, 2021, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details