மும்பை:ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்களின் கூட்டம் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று (மே.21) காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2020 ஜூலை மாதம் முதல் 2021 மார்ச் வரையிலான ரிசர்வ் வங்கியின் அறிக்கை, கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிற்கு கடந்த நிதியாண்டின் (ஜூலை- மார்ச்) ஒன்பது மாத காலத்திற்கு 99,122 கோடி ரூபாய் உபரி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு, உலகப் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.