தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வருது புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி

மும்பை: பச்சை மற்றும் மஞ்சள் இணைந்த வண்ணத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New 20 Rs note

By

Published : Apr 27, 2019, 2:25 PM IST

புதிய 20 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்கு விடப்போவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி சீரிஸ் என்ற பெயரில் புதிய ரக 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புழக்கத்திற்கு வரவிருக்கும் புதிய 20 ரூபாய் நோட்டுகளில் நாட்டின் புராதனப் பெருமையை நினைவுகூறும் வகையில் எல்லோரா குகையின் படம் வைக்கப்பட்டுள்ளதாகவும், பச்சை மற்றும் மஞ்சள் இணைந்த வண்ணத்தில் இந்த புதிய ரூபாய் நோட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 20 ரூபாய் நோட்டில், அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்ற சக்தி காந்த தாஸ் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். பழைய 20 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details