கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் குழு எடுத்த முடிவுகளின்படி, ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலேயே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 3.35 விழுக்காட்டில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடரும் வகையில் வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.