வாராக்கடன் அதிகரிப்பால் நிதிச்சிக்கலில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியின் நிலைமையை சரிசெய்ய அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டுசெயல்படும் யெஸ் வங்கி, 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களில் நன்மதிப்பைப் பெற்ற யெஸ் வங்கி சமீபகாலமாகக் கடுமையான நிதிச் சிக்கலில் தவித்துவருகிறது.
இதனைச் சரிசெய்ய அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்த ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியை நிர்வகிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.