தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! - latest RBI News in tamil

டெல்லி: வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது.

RBI hikes insurance
RBI hikes insurance

By

Published : Feb 5, 2020, 9:28 PM IST

இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார்.

இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நேற்று அமல்படுத்தியது. 1993ஆம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு ஒன்றுக்கு காப்பீட்டுத் தொகையாக அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை கோரலாம். வாடிக்கையாளர்கள் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் வைத்திருந்தாலும், ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே கோர முடியும். இந்த தொகை "வாய்ப்பு காப்பீடு" என்று அழைக்கப்படுகிறது.

வங்கி திவால் ஆகும் சூழல் ஏற்பட்டால் இந்த வைப்புத் தொகையை நாம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேல் வைத்துள்ளவர்களுக்கு வங்கி திவாலானால் சட்டரீதியான தீர்வு இல்லை. எனவே இந்த காப்பீட்டுத் தொகை நேற்று முதல் ஐந்து லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத்தொகையில் 100 ரூபாய்க்கு 10 பைசா வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 12 பைசாவாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வேலையிழப்பு குறித்து அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details