ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அரசு நடத்தும் மாநில வங்கிகளின் தலைவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் வங்கித் தலைவர்களை இன்றுசந்திப்பார் என்று தகவல் வந்துள்ளது.
வங்கியாளர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தலைநகரில் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் வெகுவாக குறைந்துவிட்ட நேரத்தில், சிறந்த கொள்கை வகுப்பாளர்களுடன் வங்கியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முதல் காலாண்டில் Q1 மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணிக்கை 5 சதவீதத்தில் இருந்து, Q2 காலாண்டில் 1.9 சதவிகிதமாக சுருங்கியதால் அனைவருமே ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சக்திகாந்த தாஸ் பதவியேற்றதிலிருந்து அவர் அனைத்து பங்குதாரர்களையும் சந்திப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் மற்றும் கடந்த காலங்களில் பல முறை வங்கியாளர்களைச் சந்தித்துள்ளார்.
மும்பை மின்ட் சாலை தலைமையகத்தில் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், NPA (செயல்படாத கடன்) தீர்மானம் , சாத்தியமான அழுத்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் MSME (மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) கடன்களை, மறுசீரமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 வங்கிகளில் சிலவற்றிற்கான அரசாங்கத்தின் மெகா-இணைப்புத் திட்டத்தின்கீழ், மத்தியில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இணைப்பின்மூலம் மொத்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 19இல் இருந்து 12 ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!