சர்வதேச அளவில் நிதி பரிவர்த்தனை குறித்த இயக்கங்கள் மற்றும் அதுகுறித்த தகவல்கள் ஸ்விஃப்ட் என்ற மென்பொருள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்விஃப்ட்(SWIFT) மென்பொருளை துஷ்பிரயோகம் செய்து வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் முகுல் சோசகி ஆகியோர் சுமார் 14,000 கோடியளவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதிமுறைகேடு செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி
விதிமுறைகளை சரியாக பின்பற்றாதக் காரணத்தால் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
ஸ்விஃப்ட் இயக்கங்களை மேற்கொள்ளும் வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வரைமுறை செய்துள்ளது. அதை சரியாக பின்பற்ற பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7A (1) (c) மற்றும் சட்டப்பிரிவு 46 (4) ஆகியவற்றின் மூலம் இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்குமுன், விதிமுறை மீறல்கள் தொடர்பாக ஸ்டேட் வங்கி, கார்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி ஆகியவற்றின் மேல் ரிசர்வ் வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.