ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்து வரும் விஸ்வநாதனின் பதவிக்காலம் வரும் 3ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அவரின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள துணை ஆளுநர்களில் அதிக அனுபவம் மிக்கவராக விஸ்வநாதன் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்காலம் நீட்டிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஒராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
NSV
சில நாட்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பதவியிலிருந்து விரல் ஆச்சாரியா திடீரென்று ராஜினாமா செய்தார். தற்போது விஸ்வநாதனும் ஓய்வு பெறும்பட்சத்தில் ரிசர்வ் வங்கி நிர்வாகம் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைச் சமாளிக்கும் விதமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.