பி.ஐ.டி.எஃப் கட்டமைப்பில் ரூ.250 கோடிக்கு புதிதாக திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மூன்று, நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட நகரங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் டிஜிட்டல் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த தொகை பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் எனவும் வங்கிக்கணக்கு தொடங்கி, செல்பேசிகள், கிரெடிட், டெபிட் கார்டுகள் என அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதியில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.