கரோனா பரவலால் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி ஒரு புறம் செல்ல, மற்றொரு புறம் வேலையின்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த நிலைமை தான் நீடிக்கிறது என சொல்லவேண்டும். இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் "கரோனா வைரஸ் தோற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு வேலையின்மை அதிகம் என தெரியவந்துள்ளது".