இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் ரேணு கோஹ்லி எழுதியுள்ள கட்டுரையில், 'இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு ஐந்து சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்த நிலையில், மத்திய அரசு அதிகப்படியான கடன் வாங்குவதால் வளர்ச்சி மேலும் குறைய வாய்ப்புள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-18 முதல் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிந்து வருகிறது. இது ஆறு ஆண்டுகள் கண்டிடாத வீழ்ச்சி என்றாலும் 2012-13 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 சதவிகிதம் வரை சரிந்திருந்தது.
இந்திய வளர்ச்சி தடைபடுவதால் தொழில் முனைவோர், தொழில் ஜாம்பவான்கள் அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர். நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே வரும்காலங்களில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்ற சூழல் நிகழ்வதால் பலதரப்பிலுமிருந்து அரசாங்கத்தின் மீது அழுத்தம் தரப்படுகிறது. பொருளாதார சரிவு ஒரு புது விஷயம் அல்ல. அதனை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கை தேவை என்பதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பொது செலவினங்களை ஊக்கப்படுத்துதல் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வர முடியுமா?
இதற்கு எளிதாக விடை சொல்ல முடியாது என்று தான் கூறவேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் என்பது பல பிரிவுகளின் கூட்டுத்தொகையாகும். அவை எப்போதும் உயர்ந்து கொண்டோ அல்லது சரிந்து கொண்டோ இருக்காது. ஒரு பிரிவில் உயர்ந்தால் மற்றொரு பிரிவில் சரிவைடையும்.
அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்தியாவின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கும் அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த கிஸான் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்தது. மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரம், எரிபொருள் அனைத்துக்கும் மத்திய அரசு மானியம் வழங்கிவருகிறது.
அரசின் மானியத்தில் நிதியாண்டு FY18 பொது விவிசாயத்துறை 35 சதவிகிதம் முன்னேறியது. மேலும் FY19 நிதியாண்டில் இது 23 சதவிகிதமாக இருந்தது. விவசாயத்துறை சற்று உயர்ந்தாலும் பொருளாதாரத்தில் இது எந்த ஒரு எழுச்சியையும் கொண்டுவரவில்லை. மேலும் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மற்றொரு சூழ்நிலை என்னவென்றால், சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அதிக செலவு செய்கிறது. இதன் மூலம் சிமெண்ட், ஸ்டீல் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் விற்பனையை பெருக்கி நுகர்வோரின் என்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த முயற்சிகளும் எதிர்பார்த்த அளவிற்கு வருமானத்தை அரசாங்கத்தால் ஈட்டிமுடியவில்லை. 2014-19 ஆண்டில் மத்திய அரசு உள்கட்டமைப்புக்காக நான்கு லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாக சரிந்துள்ளது. மேலும் இது ஐந்து சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளது.
கடுமையான சூழலில் வருமானத்தை அதிகரிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் 3.8 - 4.1 வரை குறைய வாய்ப்புள்ளது. இது இந்த ஆண்டு முடிவில் 3.3 சதவிகிதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக செலவு செய்தல் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்ற மத்திய அரசின் எண்ணத்தை மாற்றி தேவையற்ற மானிய செலவைக் குறைக்க வேண்டும். புதிதாக முதலீடு செய்யாமல், வேலை வாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் உயர்வைக் காண வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சட்டம்'