தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐந்து மாங்களுக்குப் பின் ஏற்றம் சரக்கு ரயில் போக்குவரத்து! - இந்தியாவில் சரக்கு ரயில் போக்குவரத்து

டெல்லி: ஐந்து மாதங்களாக சரிவை சந்தித்து வந்த சரக்கு ரயில் சேவை, தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

freight Rail in India
freight Rail in India

By

Published : Sep 13, 2020, 12:12 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. சரக்கு ரயில் சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தால் மட்டுமே இந்தியன் ரயில்வேஸுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. இருப்பினும், ஊரடங்கால் தொழிற்துறை முற்றிலுமாக முடங்கியதால், கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரக்கு ரயில் போக்குவரத்து சரிவைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரக்கு ரயில் போக்குவரத்து சுமார் 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் யாஷ் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக ரயில்வே துறையில் ஏற்பட்ட பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதம் முற்றிலும் சரியாகிவிட்டது. இதன் காரணமாகதான் நாம் V வடிவிலான மீட்பை பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்திய ரயில்வேஸ் மூலம் எடுத்துச் செல்லப்படும் முக்கிய பொருளாக நிலக்கரி உள்ளது. நிலக்கரியை எடுத்துச் செல்ல சரக்கு ரயிலை பயன்படுத்துவது என்பது கடந்த மார்ச் மாதம் 10 விழுக்காட்டிற்கும் மேல் சுருங்கிய நிலையில், ஆகஸ்ட் மாதம நிலக்கரி சரக்குப் போக்குவரத்து வெறும் இரண்டு விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது.

ஐந்து மாங்களுக்கு பின் ஏற்றம் சரக்கு ரயில் போக்குவரத்து

மேலும், இந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரக்கு ரயில்கள் மூலம் தானியம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 3.1 மில்லியன் டன் தானியத்தை சரக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 6.24 மில்லியன் டன் உணவு தானியங்கள் சரக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதேபோல உரங்கள் சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29 விழுக்காடு உயர்ந்துள்ளது. இருப்பினும், சிமெண்ட் எடுத்துச் செல்வது கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேண்டாம் சீனா... திருப்பூர் ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் ஆர்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details