தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மூன்றாவது காலாண்டில் பிவிஆர் நிறுவனத்துக்கு ரூ.49 கோடி நிகர இழப்பு! - PVR

நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் பிவிஆர் நிறுவனத்துக்கு ரூ.49 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.

PVR Q3 loss  PVR Q3 performance  PVR net loss  movie theatres in coronavirus  பிவிஆர்  மூன்றாவது காலாண்டு  மல்டி ப்ளெக்ஸ்  PVR  PVR reports Q3
PVR Q3 loss PVR Q3 performance PVR net loss movie theatres in coronavirus பிவிஆர் மூன்றாவது காலாண்டு மல்டி ப்ளெக்ஸ் PVR PVR reports Q3

By

Published : Jan 15, 2021, 6:47 PM IST

டெல்லி: மல்டி ப்ளெக்ஸ் ஆபரேட்டரான பி.வி.ஆர் நிறுவனம் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.49.10 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.36.34 கோடியாக இருந்தது என்று பி.வி.ஆர் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், மறுஆய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் பிவிஆர் நிறுவனத்தின் வருவாய் ரூ.45.10 கோடியாக இருந்துள்ளது. கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக இந்தப் பாதிப்பை பிவிஆர் சந்தித்துள்ளது.

இது குறித்து பிவிஆர் தரப்பில் கூறுகையில், “வணிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிவிஆர் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ) 3.26 சதவீதம் அதிகரித்து ரூ.1,481.75 க்கு வர்த்தகமாகின.

இதையும் படிங்க: புதிய திரையரங்கத்தை திறந்து வைத்த சினேகா-பிரசன்னா தம்பதி

ABOUT THE AUTHOR

...view details