நஷ்டத்தில் இயங்கும் ஏழு விமான நிலையங்களை தனியார் மயாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதன்மூலம், இழப்பு குறைந்து விமானப் போக்குவரத்து துறைக்கும் அதன் உள்கட்டமைப்பு வசதிக்கும் ஊக்கமளிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு-தனியார் கூட்டமைப்பு மூலம் இந்த செயல் திட்டம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து துறைசார் நிபுணரான அஜன் தாஸ்குப்தா கூறுகையில், அரசின் நல்ல இந்த முடிவு சிறப்பான முன்னெடுப்பு. ஏழு நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன், ஆறு லாபத்தில் இயங்கும் விமான நிலையத்தையும் சேர்த்து விற்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
இரண்டையும் இணைத்து இந்த முடிவை எடுத்துள்ளது சாதுரியமானது. இல்லையென்றால், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களை மட்டும் யாரும் வாங்க முன்வரமாட்டார்கள் என்றார்.