க்ளென்மார்க் பார்மாசுட்டிகல்ஸ் எனும் மருந்து நிறுவனம், தனது ஆன்டிவைரஸ் மருந்தான ஃபவிபிரவிர் (Favipiravir) மருந்தின் விலையை 27 விழுக்காடு குறைத்துள்ளது. கரோனா தொற்றால் லேசாக அல்லது மிதமாக பாதிப்படைந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் இந்த மருந்து, தற்போது 75 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபபிஃப்ளூ (FabiFlu) என்னும் பெயர் கொண்ட இந்த மருந்தை கடந்த மாதம் க்ளென்மார்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது 103 ரூபாய்க்கு இந்த மாத்திரை விற்பனை செய்யப்பட்டுவந்தது.
"மருந்து சிறந்த முறையில் வேலை செய்ததாலும், அதிகளவில் தயாரிக்கப்பட்டதாலும் இந்த விலைக் குறைப்பு சாத்தியமானது. இந்த மருந்தில் உள்ள மூலப்பொருளும், தயாரிப்பதற்கான வழிமுறையும் இந்தியாவில் உள்ள க்ளென்மார் நிறுவனத்தால் உருவாக்கப்படுவதால், இதன் நன்மைகள் இந்தியா முழுக்க உள்ள நோயாளிகளிடம் சென்று சேர்கின்றன" என அம்மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.