நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கடும் சுமைக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் பெட்ரோலின் விலை ரூ.100-ஐத் தாண்டியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மத்திய அரசின் வரி விதிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணம், எனவே வரியை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகம் விதிக்கின்றன. காங்கிரஸ், அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகியவற்றில் தான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளன. இதை சோனியா காந்தி அறிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் விலையை கட்டுக்குள் கொண்டுவர பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க:இந்திய ஊடகத்துறை 27% வளர்ச்சியை எட்டும்: கிரிசில் கணிப்பு