தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஊழல் வழக்கு: பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் இயக்குநருக்கு நீதிமன்ற காவல் - Joy Thomas sent to police custody

மும்பை: பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமசுக்கு நீதிமன்றம் 17ஆம் தேதிவரை காவல் வழங்கியுள்ளது. தற்போது அவரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

PMC Customers

By

Published : Oct 7, 2019, 11:17 AM IST

ஊழல்- காவல்

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 355 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வருகிற 17ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனம்

இதேபோல் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராடெக்ஸர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்.) நிறுவன நிர்வாக இயக்குநர், அவரின் மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கித் தொடர்பான சரியான தகவல்களை அளிக்கவில்லை.

குற்ற வழக்குப்பதிவு

மேலும் சில வங்கிக் கணக்குகள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அந்த கணக்குகள் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்துள்ளது.

இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில், இரு நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு தற்போது இந்த ஊழல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஜோய் தாமஸ் மீது நம்பிக்கை மீறல், மோசடி ஆகிய குற்றவழக்கும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே

வங்கி இணைப்பால் சாதாரண மக்களுக்குப் பயன் கிடைக்குமா? - ஈடிவி பாரத் சிறப்புப் பேட்டி

பிஎம்சி வங்கியில் ரூ.4,375 கோடி ஊழல் - பிரபல பாலிவுட் நடிகருக்கு சிக்கல்?

சென்னை கடன் திருவிழா, மத்திய அமைச்சர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details