பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 355 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த 17ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராடெக்ஸர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்.) நிறுவன நிர்வாக இயக்குநர் ராகேஷ் வர்த்தமான், அவரின் மகனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமும் தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கித் தொடர்பான சரியான தகவல்களை அளிக்கவில்லை. மேலும் சில வங்கிக் கணக்குகள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.