தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

’பேரழிவை நோக்கிச் சென்ற பொருளாதாரத்தை நாங்கள் சரி செய்துள்ளோம்’ - பிரதமர் மோடி - narendra modi speech about indian economy

டெல்லி: பேரழிவை நோக்கிச் சென்ற பொருளாதாரத்தை நாங்கள்தான் சரி செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM modi on Indian economy
PM modi on Indian economy

By

Published : Dec 21, 2019, 1:55 PM IST

இந்திய பொருளாதாரம் ஆறு ஆண்டுகள் கண்டிடாத கடும் சரிவை சந்தித்துவருகிறது என பொருளாதார நிபுணர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர்.

பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை இந்திய பொருளாதாரம் என்ற டாபிக் தான் பேசப்பட்டுவருகிறது.இந்நிலையில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து வலுவாக எழும் என்று தொழிற் துறை அமைப்பான அசோசாம் (ASSOCHAM) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ”இந்திய பொருளாதாரம் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன் பேரழிவை நோக்கிச் சென்றது. அதனை நாங்கள் தான் சரி செய்துள்ளோம். பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியா வலுவாக எழும்.

பொருளாதாரத்திலிருந்த நீண்ட கால சவால்களை நாங்கள் சரிசெய்துள்ளோம். முந்தைய ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 3.5 விழுக்காடாகக் குறைந்திருந்தது. பொருளாதாரம் கடந்த காலங்களிலும் ஏற்றதாழ்வுகளைக் கண்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: விடை பெறுகிறார் ஆனந்த் மஹிந்திரா!

ABOUT THE AUTHOR

...view details