கரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், விலையில்லா உணவு தானியங்கள், எரிவாயு உருளைகள் ஆகியவை ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. பெண்கள், முதியவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.