தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சேவைத்துறை ஏற்றுமதியை ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு - அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை $ 1டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார்.

By

Published : Jan 17, 2022, 11:52 AM IST

அமைச்சர் பியூஷ் கோயல்
அமைச்சர் பியூஷ் கோயல்

முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் நிறுவன தலைவர்களிடையே மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "இந்த ஆண்டு வர்த்தக ஏற்றுமதி $400 பில்லியன் இலக்கை எட்டும் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும், சேவை ஏற்றுமதி சுமார் $240 பில்லியன் முதல் $250 பில்லியன் அளவுக்கு இருக்கும். இது மிகவும் குறைவாக இருந்த போதிலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிப் பிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும்.

இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும்.

ஐடி தொழில் நிறுவனங்கள் நகரங்களை அடையாளம் கண்டால், மத்திய அரசு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும். இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை $ 1டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.

இதையும் படிங்க:தொழில்முனைவோர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் - அமைச்சர் பியூஷ் கோயல்

ABOUT THE AUTHOR

...view details