தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐந்து பில்லியன் பணப்பரிவர்த்தனையைத் தாண்டிய 'போன் பே'! - 5 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டிய ஃபோன்பே

பெங்களூரு: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான 'போன் பே', தனது பயன்பாட்டில் 5 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளது

PhonePe crosses 5 billion transaction
PhonePe crosses 5 billion transaction

By

Published : Dec 13, 2019, 11:37 PM IST

Updated : Dec 14, 2019, 8:04 AM IST

பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த செயலி, 2015ஆம் ஆண்டு மீர் நிகாம் மற்றும் ராகுல் சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது.

'போன் பே' வந்த பிறகு இதில் உள்ள இ-வாலெட்களை பயன்படுத்தி, ரொக்கமில்லாத பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றோம்.

பானிபூரி கடை முதல் நட்சத்திர விடுதி வரை, இந்த 'போன் பே' இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

இந்நிலையில் இன்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பணப்பரிவர்த்தனையில் 5 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்த விட்டோம் என்றும்; இந்த ஒரு ஆண்டில் மட்டும் பணப்பரிவர்த்தனை ஐந்து மடங்கு வளர்ந்துள்ளது என்றும் 'போன் பே' தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வரும் ஜன.13ஆம் தேதி 5ஜி சேவைக்கான ஆன்லைன் ஏலம்!

Last Updated : Dec 14, 2019, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details