தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா? - டீசல் விலை குறைப்பு

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைந்துள்ளது.

Petrol Diesel Prices
Petrol Diesel Prices

By

Published : Nov 3, 2021, 9:19 PM IST

டெல்லி:நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதுமட்டுமல்லாமல் வரலாற்றிலேயே முதன்முறையாக டீசலும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.

இந்நிலையில் மத்திய அரசு தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. சென்னையில் இன்று (நவ.3) பெட்ரோல் லிட்டர் ரூ.106.66ஆகவும், டீசல் லிட்டர் ரூ.102.59ஆகவும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திடீரென விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details