கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தாலும் ஒரு புறம் மகிழ்ச்சி அளித்துள்ளது. அதாவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சரிந்துள்ளது.
அதாவது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 71 ரூபாயாகவும் விற்பனை ஆகிவருகிறது. மேலும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, தற்போது தான் விலை சரிந்துள்ளது. மேலும் டீசல் விலை, 12 ஆண்டுகள் கண்டிடாத சரிவைக் கண்டுள்ளது.