கரோனா தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றியுள்ளது. பணத்தின் மூலம் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்திலேயே பெரும்பாலானோர் ஆன்லைன் பேமெண்ட் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். சிறிய தொகையான 10 ரூபாயும் டிஜிட்டல் வழியாக தான் செலுத்தி வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், டிஜிட்டல் மீதான ஈர்ப்பினால் மக்கள் அதையே பின்தொடர்ந்து வருகின்றனர்.
2020இல் குறைந்த பணப்புழக்கம்... டிஜிட்டலை நோக்கி பயணிக்கும் மக்கள்!
டெல்லி: 2020ஆம் ஆண்டில் பணத்தை கொடுத்து பொருள்கள் வாங்குவது மக்கள் மத்தியில் 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
பணப்புழக்கம்
இதுதொடர்பாக 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோர் இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது தெரியவந்துள்ளது. இதைக் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், பணப்புழக்கம் 50 விழுக்காடு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது தெரிகிறது. இதற்கு மற்றோரு காரணம், ஆன்லைன் செயலிகள் பணப்பரிமாற்றத்திற்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதும் அடங்கும்.