தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொன் நகை வாங்கிட பொன்னான தருணம் - புன்னகையுடன் அள்ளிச் செல்லுங்க! - business news

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 35 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாவதால், நகை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பொன்நகை வாங்கிட பொன்னான தருணம்
பொன்நகை வாங்கிட பொன்னான தருணம்

By

Published : Jun 30, 2021, 12:24 PM IST

அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகப்படுத்துவதால், அமெரிக்க டாலர்கள் வலுபெற்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவை வெளியிட்டதால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் எழுந்துள்ள தங்கத்தின் பலவீனமான நிலையின் காரணமாக, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து 35 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.20 குறைந்து நான்காயிரத்து 410 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இப்போது குறைந்துள்ள தங்கத்தின் விலை, மீண்டும் விரைவில் உயரும் என்ற வல்லுநர்களின் கணிப்பால் பொதுமக்கள் இப்போதே தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியா-அபுதாபி விமான தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details