டெல்லி: உள்நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமும், பெரு மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம், சில்லறை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் ஆண்ட்ராய்டு கட்டமைப்பைக் கொண்டுள்ள கையடக்க ‘பாய்ண்ட் ஆஃப் சேல்ஸ்’ கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனாளர்கள் இதற்கு மாத சந்தாவாக 499 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தக் கருவியில் உள்ளடக்கமாக பில்லிங் மென்பொருள், க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய படக்கருவி, 4ஜி சிம் கார்ட் இடும் வசதி, வைஃபை, ப்ளூடூத் வசதி ஆகிய அம்சங்கள் உள்ளன.
செல்போன் சார்ஜரில் மின்கசிவு: தாயுடன் 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு
2020 - 21ஆம் நிதியாண்டில் இந்தக் கருவியின் விநியோகத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்கும் 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய பேடிஎம் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களுக்குள் இரண்டு லட்சம் கருவிகள் பயனாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும், அதன்மூலம் மாதந்தோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் பேடிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லினக்ஸ் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பிஓஎஸ் கருவிகளைவிட, இக்கருவி மிகச் சிறப்பாக செயலாற்றும் என பேடிஎம் உறுதியளித்துள்ளது. 4.5 இன்ச் அளவு தொடுதிரை, 12மிமீ தடிமன், 163 கிராம் எடை என இலகுவான கையடக்க கருவியாக இந்த பேடிஎம் பிஓஎஸ் உள்ளது.
டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்!
கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய தளங்களில் இருந்து இந்தக் கருவிக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, பில்லிங் தொடர்புடைய தகவல்கள், மாத - வருட கணக்குகள் உள்ளிட்டவற்றை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.