இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே ஜி 1929ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஜிஸ்டி வரி உயர்வால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதில் பார்லே ஜியும் ஒன்று. ஜிஸ்டி வரி உயர்வால் பிஸ்கட் தயாரிக்கும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால், தயாரிப்பில் தடுமாற்றத்தை சந்திக்க தொடங்கியது பார்லே ஜி நிறுவனம். படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்துவரும் பார்லி ஜி நிறுவனம், இந்த ஆண்டு விற்பனையில் 7 முதல் 8 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. இதனால், மொத்தம் 8000 முதல் 10000 வரையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.