பான்- ஆதார் இணைப்பு: (Pan card- Aadhar linking)
ஆதார் கார்டுடன் வங்கி கணக்கு, செல்போன் எண், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், செல்போன் எண், வங்கி கணக்கு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. மேலும் வரும் மார்ச் 31 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா, வருமான வரித்துறை இதுவரை 42 கோடி பான் கார்டுகளை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் 23 கோடி கணக்குகள் தங்களது பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இணைக்காவிட்டால்?
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால்.....
- உங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இயலாது
- உங்களால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது
இணைக்கும் வழிமுறைகள்:
பான் ஆதாரை இரண்டு வழிகளில் இணைக்க முடியும். ஒன்று வருமான வரித்துறை இணையதளம் மூலம் இணைப்பது, மற்றொன்று எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மூலம் இணப்பது.