தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நடப்பாண்டில் நாட்டின் நெல் கொள்முதல் 21% உயர்வு - 2020-21 நெல் கொள்முதல்

இந்திய உணவு கழகம் கடந்தாண்டில் டிசம்பர் வரை 310.71 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் அது 375.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

Paddy procurement
Paddy procurement

By

Published : Dec 14, 2020, 10:35 PM IST

நடப்பாண்டில் நாட்டின் நெல் கொள்முதல் நிலவரம் குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் நெல் கொள்முதல் 21 உயர்வு கண்டு மொத்தம் 375.72 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.70,937.38 ஆகும்.

குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

இந்திய உணவு கழகம் கடந்தாண்டில் டிசம்பர் வரை 310.71 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் அது 375.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், நாடு முழுவதும் 41.04 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.70,937.38 கோடி அடிப்படை ஆதார விலை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் கொள்முதல் செய்யப்பட்ட 375.72 லட்சம் டன்னில், 54 விழுக்காடு அதாவது 202.77 லட்சம் டன் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிக்கி அமைப்பின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்பு

ABOUT THE AUTHOR

...view details