தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'நான்கு நட்சத்திர' விடுதிகளாக மாறுகிறது ஓயோ! - ஒயோ நிறுவனம் நான்கு நட்சத்திர விடுதிகளாக மாறுகிறது

பெங்களூரு: குறுகிய காலகட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஓயோ நிறுவனம் நான்கு நட்சத்திர விடுதிகளாக மாறுகிறது.

Oyo hotels to enter four star

By

Published : Sep 12, 2019, 10:36 AM IST

குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவரும் ஓயோ, நான்கு நட்சத்திர விடுதிகளாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஒயோ விடுதிகள் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இதற்குக் காரணம் குறைந்த விலையில் பாதுகாப்பான தங்குமிடம், எளிதில் முன்பதிவு செய்யும் வசதி, கனிவான சேவை என ஓயோ தரத்தை உயர்த்திக் கொண்டே போகலாம்.

மேலும் ஓயோ நிறுவனம், ஐந்து நட்சத்திர, ஏழு நட்சத்திர சொகுசு விடுதிகளாக மாற்ற விரும்புவதாகவும் இதற்காக மவுன்ட்டானியா டெவலப்பர்ஸ் (Mountania Developers) நிறுவனத்தின் உதவியுடன் ஓயோ விடுதிகளின் கட்டடத்தை மறு வடிவமைப்பு செய்துவருகின்றனர் . இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த வேலை முடிக்கப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதி, ஏழு நட்சத்திர விடுதியாக ஓயோ மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடுத்தர மக்களின் நண்பனாக இருந்துவந்த ஓயோ, இனிவரும் காலங்களில் உயர்தர வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details