தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான வருமான வரித் தாக்கல் - வருமான வரித்துறை

வருமான வரித் துறையின் இணையதளம் 2021 அக்டோபர் 13ஆம் தேதி வரை இரண்டு கோடிக்கும் அதிகமான வருமான வரி தாக்கல்களை பெற்றுள்ளது.

வருமான வரித் தாக்கல்
வருமான வரித் தாக்கல்

By

Published : Oct 14, 2021, 8:25 PM IST

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 ஜூன் 7 அன்று தொடங்கப்பட்ட வருமானவரித்துறை புதிய இணையதளத்தின் (www.incometax.gov.in) செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிரமங்களை வரி செலுத்துவோர் குறிப்பிட்டனர். பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு தளத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2021 அக்டோபர் 13 வரை 13.44 கோடிக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் உள்நுழைந்துள்ளனர். சுமார் 54.70 லட்சம் வரி செலுத்துவோர் தங்கள் கடவுச்சொற்களைப் பெற 'மறக்கப்பட்ட கடவுச்சொல்' வசதியைப் பெற்றுள்ளனர்.

அனைத்து வருமான வரி அறிக்கைகளையும் இ-தாக்கல் செய்ய முடியும். 2021-22-ம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் தளத்தில் செய்யப்பட்டுள்ளன, இவற்றில் வருமான வரி தாக்கல்கள் ஒன்று மற்றும் நான்கு 86 விழுக்காடு ஆகும். ஆதார் அடிப்படையிலான ஓடிபி மூலம் 1.49 கோடிக்கு அதிகமான தாக்கல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

2021-22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யாத அனைத்து வரி செலுத்துவோரும் விரைவில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திரா காந்தியை போற்றிப் பாராட்டிய ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details