குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பாங்க் ஆப் பரோடா வங்கியின் செயல்படாத சொத்துக்கள் (என்பிஏ) ஆறு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து ரூ.73,140 கோடியாக உள்ளது.
இதேபோல் ஆறு ஆண்டுகளில் இந்தியன் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.32 ஆயிரத்து 561 கோடியே 26 லட்சமாக உள்ளன. அதன்படி, பேங்க் ஆப் பரோடாவின் செயல்படாத சொத்துகள் 2014 மார்ச் இறுதியில் 11 ஆயிரத்து 876 கோடியிலிருந்து 2019 டிசம்பர் இறுதியில் ரூ.73 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளது.
அந்த வங்கிகளில் செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2014 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 35இல் இருந்து 2019 டிசம்பர் மாத நிலவரப்படி ஆறு லட்சத்து 17 ஆயிரத்து 306 ஆக உயர்ந்து காணப்படுகிறது.
இந்தியன் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் எட்டாயிரத்து 68 கோடி ரூபாயிலிருந்து, 32 ஆயிரத்து 56 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்படாத கணக்குகள் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ஐந்து லட்சத்து 64 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது, இது மார்ச் 31, 2014 நிலவரப்படி இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 921 ஆக இருந்தது.