வணிகப் பிரிவு, ஈடிவி பாரத்: பி.வி.சி.யால் ஆன புதிய ஆதார் அட்டையை 50 ரூபாய்க்கு இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது.
இப்போது பி.வி.சி அட்டையில் ஆதார் அட்டையை (Aadhaar Card) மீண்டும் அச்சிடலாம் என்று ஆதார் ஆணையம் ட்வீட் செய்துள்ளது. இந்த அட்டையை உங்கள் ஏடிஎம் அட்டையைப் போலவே எளிதில் வைத்துக்கொள்ள முடியும்.
எந்தவொரு காலநிலையிலும் ஆதார் பி.வி.சி அட்டை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இனி ஆதார் அட்டை ஈரமாவது குறித்தோ, கிழிவது குறித்தோ, கசங்குவது குறித்தோ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பி.வி.சி கார்டுகளின் வடிவத்தில் வரும் புதிய ஆதார் அட்டை உறுதியானதாக இருக்கும்.
தோற்றத்தில் கவர்ச்சியானதும், சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது புதிய ஆதார் அட்டை. பாதுகாப்பு அம்சங்களான ஹாலோகிராம்கள், கில்லோச் வடிவங்கள், கோஸ்ட் இமேஜ்கள், மைக்ரோடெக்ஸ்ட் ஆகியவை இதில் அடங்கும். இணையத்தில் விண்ணப்பித்து இதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிவிசி ஆதார் அட்டையை எவ்வாறு பெறலாம்?
- முதலில் நீங்கள் UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.
- இங்கே, 'My Aadhaar’ பகுதிக்குச் சென்று, 'Order Aadhaar PVC Card’ என்பதைக் கிளிக் செய்ய வெண்டும்.
- உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்
- பாதுகாப்பு குறியீடு, கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, ஓடிபி-ஐ (OTP) கிளிக் செய்க
- உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் ஓடிபி தோன்றும், அதை உள்ளிடவும்
- ஆதார் பி.வி.சி அட்டை முன்னோட்டம் உங்களுக்கு முன்னால் காணப்படும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து, ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- கட்டணம் செலுத்தப்பட்டவுடன் உங்கள் செயல்முறை முடிந்துவிடும்.
இதன் பிறகு புதிய ஆதார் அட்டை விரைவு அஞ்சல் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும்.